ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் ரூ.1.97 கோடி உண்டியல் காணிக்கை : 98 கிராம் தங்கம், 605 வெள்ளியும் கிடைத்தது

ஸ்ரீ காளஹஸ்தி : ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் ரூ.1.97 கோடி உண்டியல் காணிக்கையை பக்தர்கள் செலுத்தினர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

அவ்வாறு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள உண்டியல்களில் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த 35 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணியில் நேற்று கோயில் அலுவலர் மூர்த்தி முன்னிலையில் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள், மற்றும் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அதில் ரொக்கப் பணமாக ₹1 கோடியே 97 லட்சத்து 72 ஆயிரத்து 140 மற்றும் தங்கம் 98 கிராம், வெள்ளி 605 கிலோ 100 கிராம், அமெரிக்கா மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்த பக்தர்கள் செலுத்திய காணிக்கை 233 வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

The post ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் ரூ.1.97 கோடி உண்டியல் காணிக்கை : 98 கிராம் தங்கம், 605 வெள்ளியும் கிடைத்தது appeared first on Dinakaran.

Related Stories: