திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் முறைகேடு புகார் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர், செயல் அதிகாரிக்கு விஜிலென்ஸ் நோட்டீஸ்

திருமலை: திருப்பதி தேவஸ்தானத்தில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர், செயல் அதிகாரி உள்ளிட்டோருக்கு விஜிலென்ஸ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த ஆட்சியில் முறைகேடுகள் நடந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான மாநில அரசு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த விஜிலென்ஸ்க்கு உத்தரவிட்டது. அதன்பேரில் திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த 2 மாதங்களாக விசாரணை நடந்தது. மேலும் விஜிலென்ஸ் அதிகாரிகளின் விசாரணையில், இன்ஜினியரிங் பிரிவில் ஆண்டுக்கு ரூ.300 கோடி மட்டுமே இதற்கு முன்பு நிதி ஒதுக்கி வந்தனர்.

ஆனால் ஒய்.வி.சுப்பா ரெட்டி, கருணாகர் ரெட்டி தலைவராக இருந்த கால கட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கோவிந்தராஜ சுவாமி சத்திரங்கள் இடித்து புதுப்பிக்க மட்டும் சுமார் ரூ.450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுவிம்ஸ் மருத்துவமனையில் கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.77 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் நடந்த முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர்கள் ஒய்.வி சுப்பாரெட்டி மற்றும் கருணாகர் ரெட்டி, செயல் அதிகாரி தர்மா ரெட்டி, முதன்மை நிதி அதிகாரி பாலாஜி உள்ளிட்டோருக்கு மாநில விஜிலென்ஸ் அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

The post திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் முறைகேடு புகார் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர், செயல் அதிகாரிக்கு விஜிலென்ஸ் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: