ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகு மூழ்கி மாயமான மீனவர்களையும் மீட்டுத்தரக் கோரி ஸ்டிரைக் நடத்தி வருகின்றனர். ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தித்தர மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.