இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த பெண்ணையும், அவரது காதலனையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது, அந்த பெண், நாங்கள் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலிக்கிறோம் என்றனர். அப்போது, நீதிமன்றத்தில் இருந்த மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி, இந்து திருமணச் சட்டத்தின்படி சகோதர சகோதரி உறவு கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்ய முடியாது. அதற்கு சட்டம் தடை விதிக்கிறது என்றார். இதுகுறித்து நீதிபதிகள் அந்த பெண்ணிடம் கேட்டபோது, இருவரும், தாங்கள் 4 தலைமுறைக்கு முன்புள்ள உறவின் அடிப்படையில்தான் அண்ணன்-தங்கை உறவு வரும். 4 தலைமுறைக்கு முன்புள்ள உறவுக்கு திருமணச் செய்ய திருமணம் சட்டம் தடை விதிக்கவில்லை என்று விளக்கம் அளித்தனர். அப்போது, நீதிமன்றத்தில் நின்றுகொண்டிருந்த அந்த பெண்ணின் தாய் மகளின் காலில் விழுந்து தன்னுடன் வருமாறு அழுது மன்றாடினார்.
அண்ணனை திருமணம் செய்தால் ஊரே சிரிக்கும். அவமானம் தாங்காமல் நான் தற்கொலை செய்யத்தான் வேண்டும் என்றார். ஆனால், அந்த பெண் அதை கேட்காமல், ‘சாக வேண்டுமானால் சாவு’ என்று தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதிகளும், அப்போது நீதிமன்றத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் மகள் சட்டவிரோத காவலில் இல்லாததால், இந்த ஆட்கொணர்வு வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர். பின்னர் அந்த தம்பதியிடம், உங்கள் விருப்பம் போல் நீங்கள் வாழ்ந்து கொள்ளுங்கள். ஆனால், உங்கள் திருமணம் சட்டப்படி செல்லாது என்று கூறி அனுப்பி வைத்தனர். போலீசாரிடமும், அந்த பெண்ணின் தாயாரிடமும், இனி இவர்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்று நீதிபதிகள் அறிவுரை வழங்கினர். நீதிமன்றத்தில் இருந்தவர்கள் இந்த வழக்கை பார்த்து இப்படியும் நடக்குமா என்று வேதனையுடன் பேசிக்கொண்டனர்.
The post 4 தலைமுறைக்கு முன்னால் உள்ள உறவின் அடிப்படையில் அண்ணன்-தங்கை உறவுமுறை உள்ளவர்கள் காதல் திருமணம்: ஆட்கொணர்வு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அறிவுரை appeared first on Dinakaran.