திசையன்விளையில் இருந்து புதிய இரு வழித்தடங்களில் மதுரைக்கு அரசு பஸ்கள் இயக்கம்

*சபாநாயகர் அப்பாவு துவக்கிவைத்தார்

திசையன்விளை : திசையன்விளையில் இருந்து புதிதாக இரு வழித்தடங்களில் மதுரைக்கு செல்லும் பஸ்களின் இயக்கத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார். நெல்லை மாவட்டம், திசையன்விளையில் புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி ராதாபுரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமையில் நடந்தது. ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜோசப்பெல்சி முன்னிலை வகித்தார். போக்குவரத்து பணிமனை மேலாளர் பிரவீன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தமிழக சபாநாயகர் அப்பாவு, புதிய வழித்தடங்களில் பஸ்களின் இயக்கத்தை கொடியசைத்துத் துவக்கிவைத்தார்.

இதைத்தொடர்ந்து ஒருபேருந்தில் பொதுமக்களுடன் சிறிது தூரம் பயணித்தார். தன்னுடன் பயணித்த அனைவருக்கும் பணம் கொடுத்து டிக்ெகட் எடுத்தார்.பின்னர் அவர் பேசுகையில் ‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியில் போக்குவரத்து துறையில் திசையன்விளை பணிமனைக்கு மட்டும் 10 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது திசையன்விளையில் இருந்து மதுரைக்கு புதிய பஸ் இயக்கப்படுகிறது.

அதேபோல் திசையன்விளை திருச்செந்தூர் செல்கின்ற பஸ் மடத்தச்சம்பாடு, குட்டம் வழியாக செல்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திசையன்விளை பணிமனையில் நடத்துனர், ஓட்டுநர் மற்றும் அங்கு பணிபுரியும் பணியாளர்கள் தங்குவதற்கு ஓய்வறைகள் கட்டப்படுகின்றன. இதற்காக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்தாண்டு ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் விரைவில் துவக்கப்படும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மதுரைக்கு ஏற்கெனவே இயங்கும் பஸ் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யாமல், கூடுதலாக அதிகாலை 5 மணிக்கு மேலும் ஒரு புதிய பஸ் இயக்கப்படும்’’என்றார்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த வியாபாரிகள் சங்க மாநில துணைச்செயலாளர் அரிமா தங்கையா கணேசன், அரிமா சங்க முன்னாள் கவர்னர் சுயம்புராஜன், அறங்காவலர் குழு உறுப்பினர் சமூகை முரளி, மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், இளைஞர் அணி நகரச் செயலாளர் நெல்சன், பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், ஜோஸ்பின் சரஸ்வதி, உதயா, பிரேம்குமார், பொற்கிளி நடராஜன், ராஜா, நெப்போலியன், லிங்கராஜ், குளோபல் பிரபாகரன், கேடிபி ராஜன், பொன் இசக்கி, அமெச்சியார், காங்கிரஸ் நகர தலைவர் ஆல்பர்ட், மருதூர் மணிமாறன், ஐசக், அந்தோனிராஜ், விஜயபெருமாள், முருகேசன், போக்குவரத்து தொமுச தலைவர் அசாருதீன் முபாரக், பொருளாளர் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் செல்வக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பயணிகள் வரவேற்பு

இவ்வாறு திசையன்விளையில் புதிதாக மூன்று வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தடம் எண்.173எச் பஸ் திசையன்விளையில் இருந்து புறப்பட்டு தச்சன்விளை, பூச்சிக்காடு, அதிசயபுரம், புத்தன்தருவை, குட்டம், கூடுதாழை, உவரி, இடையன்குடி வழியாக மீண்டும் திசையன்விளை வந்தடையும். ஏற்கெனவே இயங்கிய தடம் எண் 504 புதுப்பிக்கப்பட்டு திசையன்விளையில் இருந்து காலை 9.40க்கு புறப்பட்டு நெல்லை வழியாக மதியம் 2.40 மணிக்கு மதுரை சென்றடையும், அதே பஸ் அங்கிருந்து மதியம் 3.20க்கு புறப்பட்டு இரவு 7.20க்கு திசையன்விளை வந்தடையும்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திசையன்விளையில் இருந்து காலை 5 மணிக்கு மதுரைக்கு கூடுதலாக ஒரு பஸ் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள பயணிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் முழுமனதுடன் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.

The post திசையன்விளையில் இருந்து புதிய இரு வழித்தடங்களில் மதுரைக்கு அரசு பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: