தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் கேலோ இந்தியா போட்டி செலவான ரூ.43.33 கோடி நிதி: அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு வழங்கினர்

சென்னை: சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்திய செலவான ரூ.43.33 கோடி நிதி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் அமைச்சர் உதயநிதி, சேகர்பாபு ஆகியோரால் வழங்கப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்டச் செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு ஆகியோர் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023, நடத்திய செலவான ரூ.43.33 கோடி நிதியை சென்னை பெருநகர வளர்ச்சி குழும திட்ட நிதியில் இருந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் வழங்கினர்.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023, தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மற்றும் மதுரையில் கடந்த 19.01.2024 முதல் 31.01.2024 வரை சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்விற்கு ஏற்படும் செலவில், ரூ.61.90 கோடியை அந்தந்த உள்ளூர் திட்டமிடல் ஆணையங்களின் நிதியில் இருந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு வழங்க ஆணையிடப்பட்டதின் தொடர்ச்சியாக, போட்டிகளை நடத்திய செலவான ரூ.43.33 கோடி நிதியை நேற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, சி.எம்.டி.ஏ தலைமை திட்ட அமைப்பாளர் ருத்ரமூர்த்தி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் கேலோ இந்தியா போட்டி செலவான ரூ.43.33 கோடி நிதி: அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு வழங்கினர் appeared first on Dinakaran.

Related Stories: