பழநி, ஆக. 27: பழநி அருகே ஆயக்குடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. சுமார் 25 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை பணி ஆய்வாளர்கள் ஒருங்கிணைந்து புகை அடிக்கும் இயந்திரங்கள் மற்றும் வாகன புகை அடிக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி மருந்தடிக்கப்பட்டன.
பின்னர் கொசு புழுக்கள் அழித்தல், குப்பைகள் அள்ளுதல், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள், சிகிச்சை முறைகள், வீட்டை சுகாதாரமாக பராமரிக்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவை தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டு பிட் நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன. இதில் பேரூராட்சி தலைவர் மேனகா ஆனந்தன், துணை தலைவர் சுதாமணி கார்த்திகேயன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன், பேரூர் செயலாளர் சின்னத்துரை மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
The post பழநி ஆயக்குடியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் appeared first on Dinakaran.