விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

 

திருப்பூர், நவ. 26: திருப்பூர் வேளாண்மை இணை இயக்குனர் (பொ) கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டில், சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நெல் மற்றும் மக்காச்சோளம் பயிர் காப்பீட்டு செய்ய கடைசி நாள் வரும் 30ம் தேதி ஆகும். நெற்பயிருக்கு காப்பீட்டு கட்டணமாக ஏக்கருக்கு ரூ.573 மற்றும் மக்காச்சோள பயிறுக்கு காப்பீட்டுக் கட்டணம் ஏக்கருக்கு ரூ.542 ஆகும்.

திருப்பூர் மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டில் நெற்பயிர் இதுவரை 6,625 ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ளதில் 236 ஏக்கருக்கு மட்டுமே விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். மேலும், மக்காச்சோளம் பயிர் இதுவரை 26,411 ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ளதில் 1063 ஏக்கருக்கு மட்டுமே விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.இதில், நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் முடிந்து விட்டது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று. பயிர் காப்பீட்டு செய்வதற்கான கால அவகாசம் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கடைசி நாள் வரை காத்திருக்காமல், வரும் 30ம் தேதிக்கு முன்னதாகவே காப்பீடு செய்து பயன் பெறலாம். காப்பீடு செய்யும் போது சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண்கள், பரப்புகள் மற்றும் வங்கி கணக்கு எண் சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்து காப்பீடு செய்ததற்கான ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: