வேளச்சேரி தண்டீஸ்வரம் நகர் பேன்சி ஸ்டோரில் தீவிபத்து: கரும்புகை சூழ்ந்ததால் மக்களுக்கு கண் எரிச்சல்

வேளச்சேரி: வேளச்சேரி தண்டீஸ்வரம் நகர் மெயின் ரோட்டில் ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் பேன்சி ஸ்டோர் உள்ளது. இங்கு வேலை செய்யும் ஊழியர்கள், 2வது தளத்தில் தங்கியுள்ளனர். நேற்று காலை ஊழியர் குமார் கடையை திறக்க வந்தபோது, கடையில் தீவிபத்து ஏற்பட்டது. சக ஊழியர்களுடன் சேர்ந்து தீயை அணைக்க முயன்றார். ஆனால், காற்றில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து, அனைவரும் வெளியேறினர்.

தகவலறிந்து திருவான்மியூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை, மேடவாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகளவில் புகை சூழ்ந்ததால், தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. சுற்று வட்டார பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள், கடையில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீவிபத்துக்கான காரணம் குறித்து வேளச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post வேளச்சேரி தண்டீஸ்வரம் நகர் பேன்சி ஸ்டோரில் தீவிபத்து: கரும்புகை சூழ்ந்ததால் மக்களுக்கு கண் எரிச்சல் appeared first on Dinakaran.

Related Stories: