லடாக்கில் 5 மாவட்டங்கள் உதயம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு கடந்த 2019 ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜம்மு காஷ்மீரை லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக பிரித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. லடாக் யூனியன் பிரதேசத்தில் தற்போது லே மற்றும் கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் லடாக்கில் மேலும் 5 புதிய மாவட்டங்களை உருவாக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஜான்ஸ்கர், த்ராஸ், ஷாம், நும்பாரா மற்றும் சாங்தாங் ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன.

The post லடாக்கில் 5 மாவட்டங்கள் உதயம் appeared first on Dinakaran.

Related Stories: