படூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மாணவி சென்ற போது, திடீரென அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள் அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்த போது, மாணவி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அதை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே மாணவியிடம் விசாரித்த போது, உடன் படிக்கும் மாணவன் ஒருவர், ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்து ெசன்று தனிமையில் இருந்ததாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தனது மகளை கர்ப்பமாக்கிய மாணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின்படி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவியை கர்ப்பமாக்கிய மாணவனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, மாணவன் உடன் படிக்கும் சக மாணவியை காதலிப்பதாக கூறி கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று வந்ததும், பிறகு மாணவியுடன் தனிமையில் இருந்ததும் தெரியவந்தது. பிறகு மாணவனின் செல்போனை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்த போது, அதில் சம்பந்தபட்ட மாணவன் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளில் 5க்கும் மேற்பட்டோரை தியேட்டர் உள்ளிட்ட இங்களுக்கு அழைத்து சென்ற புகைப்படங்களும், சக மாணவிகளுடன் தனிமையில் இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் போலீசார் மாணவனிடம் செல்போனில் உள்ள வீடியோக்களை காட்டி விசாரணை நடத்திய போது, மாணவன் 10ம் வகுப்பு படிக்கும் போதே சக மாணவிகளை தனியாக அழைத்து சென்று ஒன்றாக இருந்தது தெரியவந்தது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 17 வயதுக்கு குறைவானவர்கள் என்பதால், மாணவனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் குறித்து கடந்த 4 நாட்களுக்கு மேலாக மகளிர் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ராயப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post அரசு பள்ளியில் படிக்கும் 5க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: சக மாணவன் மீது கருவுற்ற மாணவியின் பெற்றோர் போலீசில் புகார்.! சென்னை ராயப்பேட்டையில் பரபரப்பு appeared first on Dinakaran.