நத்தம் அருகே பஸ் – டூவீலர் மோதல் தம்பதி, மகன் பரிதாப பலி

நத்தம் : நத்தம் அருகே, தனியார் பள்ளி பஸ் மீது டூவீலர் மோதிய விபத்தில் பெற்றோர், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உசிலம்பட்டியை சேர்ந்தவர் முருகன் (40), லாரி டிரைவர். மனைவி பஞ்சு (30). இவர்களுக்கு 4 மகள்கள், ஒரு மகன். முருகன், மனைவி பஞ்சு, மகன் தர் (6) ஆகியோருடன், திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை டூவீலரில் சென்றார்.

நத்தம் – மதுரை நான்கு வழிச்சாலையில் முடக்குச்சாலை என்ற பகுதியில் காலை 8.30 மணியளவில் வந்தபோது, ஒரு வளைவில் எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் மீது டூவீலர் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த முருகன், பஞ்சு, தர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் மற்றும் டிரைவர் காயமின்றி தப்பினர்.

தகவலறிந்து வந்த நத்தம் போலீசார், இறந்த 3 பேரின் உடல்களை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஒரு குடும்பத்தில் தந்தை, தாய் மற்றும் தம்பி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post நத்தம் அருகே பஸ் – டூவீலர் மோதல் தம்பதி, மகன் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: