தொடர் மழை, வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரிப்பு

அண்ணாநகர், ஆக.23: கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து காயகறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த சிறு மற்றும் மொத்த வியாபாரிகள், பொதுமக்கள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், தென் மாவட்டங்களில் தொடர் மறை மற்றும் வரத்து குறைவால் காய்கறிகள் விலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு, ஒரு கிலோ கேரட் ₹100க்கும், எலுமிச்சை ₹150க்கும், வெங்காயம் ₹40க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று ஒரு கிலோ கேரட் ₹100ல் இருந்து ₹120க்கும், எலுமிச்சை ₹120ல் இருந்து ₹180க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புறநகர் கடைகளில் ஒரு கிலோ கேரட் ₹160க்கும், எலுமிச்சை ₹220க்கும், வெங்காயம் ₹65க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், ஒரு கிலோ தக்காளி ₹25க்கும், சின்ன வெங்காயம் ₹75க்கும், பீன்ஸ் ₹45க்கும், பீட்ரூட் மற்றும் முள்ளங்கி ₹15க்கும், சவ்சவ் ₹20க்கும், முட்டைகோஸ் ₹18க்கும், வெண்டைக்காய், கத்தரிக்காய் ₹25க்கும், காராமணி மற்றும் பாகற்காய், சேமக்கிழங்கு ₹40க்கும், சுரைக்காய் ₹16க்கும், புடலங்காய் ₹20க்கும், சேனைக்கிழங்கு ₹60க்கும், முருங்கைக்காய் ₹30க்கும், காலிபிளவர் ₹32க்கும், வெள்ளரிக்காய் ₹22க்கும், பச்சை மிளகாய் ₹65க்கும், பச்சை பட்டாணி ₹150க்கும், இஞ்சி ₹140க்கும், பூண்டு ₹300க்கும், அவரைக்காய் ₹35க்கும், பீர்க்கங்காய் ₹33க்கும், நூக்கல் ₹25க்கும், கோவைக்காய் ₹34க்கும், கொத்தவரங்காய் ₹35க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமார் கூறுகையில், ‘‘வரத்து குறைவால் கேரட், வெங்காயம், எலுமிச்சை உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது. ஊட்டியில் மழை பெய்து வருவதால் குறைவான கேரட் வந்ததால் கேரட் விலை உயர்ந்துள்ளது. அதே போல் கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் பெரிய வெங்காயத்தின் வரத்து குறைவால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது,’’ என்றார்.

The post தொடர் மழை, வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: