இந்தியாவில் குரங்கம்மை நோய் பரவுவதற்கு வாய்ப்பு இல்லை: மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் தகவல்

சென்னை: அணு ஆராய்ச்சி விஞ்ஞானியான டாக்டர் கல்பனா சங்கர் எழுதிய “The scientists entrepreneur” என்ற சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா கோபாலபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை ஆராய்ச்சியாளரும் இந்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் முதன்மை ஆலோசகருமான மருத்துவர் சவுமியா சாமிநாதன் புத்தகத்தை வெளியிட்டார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: குரங்கம்மை நோய் தடுப்பிற்காக உலக சுகாதார மையத்திலிருந்து மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பாக்ஸ் என்பது சின்னம்மை குடும்பத்தைச் சார்ந்தது. சின்னம்மை பாதிப்பு போல பார்ப்பதற்கும், அதேபோல் தான் இருக்கும். காய்ச்சல், அம்மை போடுவது, சோர்வாக இருப்பது இதெல்லாம் இவற்றின் அறிகுறி. முதலில் மிருகங்களிடமிருந்து பரவிய வைரஸ் இப்போது, மனிதர்கள் மூலம் பரவுகிறது. மிக நெருக்கமாக இருந்தால் மட்டுமே பரவும். கொரோனா போல காற்றில் பரவக்கூடிய நோய் கிடையாது. அதனால் அச்சப்பட தேவையில்லை. இந்தியாவில் கவலைப்படும் நிலையில் இல்லை. அரசு ஏற்கனவே 30 ஆய்வகங்கள் தயார் செய்திருக்கின்றார்கள். வெளிநாடுகளில் இருந்து உள்நுழையக்கூடிய அனைவருக்கும் சோதனை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மேற்கொண்டு வருகிறார்கள். இப்போதைக்கு பாதிப்புகள் இல்லை, வருவதற்கும் வாய்ப்புகள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்தியாவில் குரங்கம்மை நோய் பரவுவதற்கு வாய்ப்பு இல்லை: மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: