உலகளாவிய முதலீடுகளின் மையம் தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:முதலீடுகள் மழை பொழியும் நாள், நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கு சக்தி தருகிறது. நமது திராவிட மாடலின் கீழ் உலகளாவிய முதலீடுகளின் மையமாக தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது. தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024ல், ரூ.17,616 கோடி முதலீட்டில் 19 திட்டங்களைத் துவக்கிவைத்து, ரூ.51,157 கோடி மதிப்பிலான 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினேன்.

மொத்தம் 1,06,803 புதிய வேலைகள் உருவாக்கப்படுகின்றன, இது நமது இளைஞர்களுக்கு அபரிமிதமான வாய்ப்புகளை வழங்குகிறது மற்றும் மாநிலம் முழுவதும் சமமான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தமிழ்நாட்டின் வேகம், தைரியம், வெளிப்படைத்தன்மை மற்றும் வளமான திறமைக்கு ஒரு சான்றாக செயின்ட் கோபேன் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி சந்தானத்தின் பேச்சு அங்கீகாரமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் விளம்பரத் தூதுவராக பொறுப்பேற்றதற்காகவும், தெற்காசியாவிலேயே சிறந்த முதலீட்டு இடமாக நமது மாநிலத்தை உறுதிப்படுத்தியதற்காகவும் சந்தானத்திற்கு எனது நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post உலகளாவிய முதலீடுகளின் மையம் தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: