அனுமதியின்றி முகாம் நடத்தினால் கடும் நடவடிக்கை: தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வளாகத்தில் கடந்த என்சிசி முகாமில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்நிலையில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிச்சாமி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்:

தனியார் சுயநிதிப் பள்ளிகளில் என்சிசி, என்எஸ்எஸ், ஸ்கவுட் மற்றும் ஜேஆர்சி போன்ற அமைப்புகள் செயல்படுகின்றன. அந்த அமைப்புகளை பள்ளிகளில் செயல்படுத்த மாநில அமைப்பிடம் முறையாகப் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். வெளியிடங்களில் முகாம் நடத்தப்பட வேண்டியிருந்தால், பெற்றோர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மூலமாகவும், மாணவிகளுக்கு பெண் ஆசிரியைகள் மூலமாகவும் மட்டுமே பயிற்சிகள் வழங்க வேண்டும். அனுமதி இல்லாமல் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

The post அனுமதியின்றி முகாம் நடத்தினால் கடும் நடவடிக்கை: தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: