ரேபரேலியில் துப்பாக்கி சூட்டில் பலியான தலித் இளைஞரின் குடும்பத்துடன் ராகுல் சந்திப்பு

ரேபரேலி: உத்தரப்பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தலித் இளைஞரின் குடும்பத்தினரை மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேரில் சந்தித்து பேசினார். உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் உள்ள சிஸ்னி கிராமத்தில் கடந்த 11ம் தேதி உள்ளூரை சேர்ந்த சிலரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது துப்பாக்கி சூடு நடத்தியதில் தலித் இளைஞர் அர்ஜூன் பாசி(22) பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் மக்களவை எதிர்கட்சி தலைவரும் ரேபரேலி எம்பியுமான ராகுல்காந்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, முடிதிருத்தும் தொழிலாளியான அர்ஜூனின் சகோதரருக்கு தர வேண்டிய பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தான் அர்ஜூன் கொல்லப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

ஒரு தலீத் கொல்லப்பட்டதால் இங்குள்ள மக்கள் நீதி கேட்கிறார்கள். அவரது முழு குடும்பமும் அச்சுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. உத்தரப்பிரதேசத்தில் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் மதிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இந்த குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் வரை நாம் பின்வாங்க கூடாது” என்றார்.

The post ரேபரேலியில் துப்பாக்கி சூட்டில் பலியான தலித் இளைஞரின் குடும்பத்துடன் ராகுல் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: