காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2024-2025ம் ஆண்டுக்கான பட்டய பயிற்சி துவக்க விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். பின்னர், ஜெயஸ்ரீ பேசுகையில், கூட்டுறவு பயிற்சி பெற்று, ஏராளமான வேலை வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதை வேளையில் முடிந்தவரை மற்றவர்களுக்கு கூட்டுத்துறை நாட்டுறவு என்ற அடிப்படையில் உதவிடவும் வேண்டும்’ என்றார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் சரக துணைப்பதிவாளர் சாவித்திரி, அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர் மற்றும் முதல்வர் வெங்கட்ரமணன் உள்பட 300க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் விரிவுரையாளர் அபிராமி நன்றி கூறினார்.
The post கூட்டுறவு பட்டய பயிற்சி தொடக்கம் appeared first on Dinakaran.