கஞ்சா விற்ற நான்கு பேர் கைது

செங்கல்பட்டு, நவ. 15: செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பாலூர் காவல் நிலையத்திற்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, பாலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆப்பூர் மலைக்கோயில் அருகே காட்டுப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நான்கு பேரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். நடத்திய விசாரணையில் கைதான நபர்கள் வீரமணி என்பரின் மகன் மணிகண்டன் (27), மாடசாமி என்பவரின் மகன் ராமகிருஷ்ணன் (43), வீரமணி என்பவரின் மகன் ஐயப்பன் (19), துரைராஜ் என்பவரின் மகன் சந்தோஷ் (21) ஆகியோர் என தெரியவந்தது. மேலும், கைதான நபர்கள் மீது பாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு அருகே சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வழக்கில் நான்கு பேர் கைதான சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post கஞ்சா விற்ற நான்கு பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: