ஊத்துக்கோட்டை அருகே மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி: முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே மாணவிகளுக்கு சைபர் க்ரைம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்றார். ஊத்துக்கோட்டை அருகே கச்சூர் கிராமத்தில் விவேகானந்தா கல்விக்குழுமத்தின் சார்பில் விவேகானந்தா விஷன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பல்வேறு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சைபர் க்ரைம் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், கல்விக்குழும தலைவர் அரங்கநாதன் தலைமை தாங்கினார். கிரிஜா ரங்கநாதன் குத்து விளக்கு ஏற்றினார்.

துணைத்தலைவர் கிலாரி ராஜேஷ், செயலாளர் அவந்திகா ராஜேஷ் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் லீலா வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு மாணவர்களிடம் சைபர் க்ரைம் பாதுகாப்பு குறித்து பேசினார். பின்னர் 10, 11, 12ம் வகுப்புகளில் முதல் இடத்தை பிடித்த மாணவ – மாணவிகள் 50 பேருக்கு பரிசுகள் வழங்கினார். மேலும் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தமிழ்நாடு அளவில் நடந்த தடகளம், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கினார்.

The post ஊத்துக்கோட்டை அருகே மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி: முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: