ஓம்சக்தி எல்லையம்மன் கோயிலில் 224ம் ஆண்டு தீமிதி திருவிழா

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த தொழுவூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஓம்சக்தி மாரியம்மன் என்கின்ற ஓம் சக்தி எல்லையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதத்தில் 10 நாட்கள் திருவிழாவில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, அம்மன் வீதி உலா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடித்திருவிழா தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்புக் கட்டி விரதமிருந்து, பொங்கல் வைத்து, கூழ்வார்த்து அம்மனை வழிபாடு செய்துவந்தனர். இதில் 8ம் நாளான வெள்ளிக்கிழமை இரவு சப்த கன்னிகளான 7 அம்மன்கள் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான நேற்றுமுன்தினம் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் தொழுவூர், தண்ணீர்குளம், காக்களூர், செவ்வாப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து அம்மன் வீதி உலா நடைபெற்றது.

The post ஓம்சக்தி எல்லையம்மன் கோயிலில் 224ம் ஆண்டு தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: