வேலூர் கோட்டை மைதானத்தில் கூடுதல் பூங்கா அமைக்க ஓசூரில் இருந்து லாரியில் வந்தடைந்த புற்கள் நடவு செய்யும் பணிகள் தொடக்கம்

 

வேலூர்: வேலூர் கோட்டை மைதானத்தை சுருக்கி கூடுதல் பூங்கா அமைக்கும் பணிக்காக ஓசூரில் இருந்து பூங்கா புற்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாநகரின் மையத்தில் திலகம் போல் அமைந்துள்ள தரைக்கோட்டையான வேலூர் கோட்டையை சுற்றி சுமார் 3 கி.மீ தூரத்துக்கு அகழி அதன் கழுத்தில் மணி மாலை போல் அமைந்துள்ளது. கோட்டை நுழைவு வாயிலின் தெற்கில் மைதானத்தின் ஒரு பகுதி புல்வெளி பூங்காவாக தொடர்ந்து பராமரிப்பில் இருந்து வருகிறது. வடக்கில் அமைந்துள்ள பூங்கா அவ்வப்போது பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோட்டைக்குள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான அம்சங்களுடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

The post வேலூர் கோட்டை மைதானத்தில் கூடுதல் பூங்கா அமைக்க ஓசூரில் இருந்து லாரியில் வந்தடைந்த புற்கள் நடவு செய்யும் பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: