அங்கு, அபிஷேக்கிடம் ரூ.10 லட்சத்தை பெற்று, உடன் வந்த நண்பர் விஜய்யிடம் கொடுத்துள்ளார். பின்னர், இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றதும், பாசில் அகமது தனது காசோலையை அபிஷேக் வீட்டில் மறந்து வைத்துவிட்டது தெரிந்தது. அதை எடுக்க அபிஷேக் வீட்டிற்கு சென்றார். பின்னர், அங்கிருந்து திருப்பி வந்து பார்த்த போது, ரூ.10 லட்சத்துடன் விஜய் மாயமானது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாசில் அகமது சம்பவம் குறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தப்பி ஓடிய விஜய்யை தேடி வருகின்றனர்.
The post கடன் வாங்க உடன் அழைத்து சென்றபோது நண்பனின் ரூ.10 லட்சத்தை அபேஸ் செய்த வாலிபர்: போலீசில் புகார் appeared first on Dinakaran.