லேட்டரல் என்ட்ரி முறையில் 45 இணை செயலர், இயக்குநர் பதவிகளை நிரப்பும் யுபிஎஸ்சி: அறிவிப்பு வெளியீடு

புதுடெல்லி: ஒன்றிய அரசின் இணை செயலாளர்கள், இயக்குநர்கள், துணை செயலாளர்கள் போன்ற முக்கிய உயர் பதவிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்ஓஎஸ் மற்றும் பிற குரூப் ஏ சேவை அதிகாரிகளைக் கொண்டு நிரப்பப்படும்.
கடந்த 2018ம் ஆண்டு முதல், வெளிச்சந்தையில் இருந்து வல்லுநர்கள் லேட்டரல் என்டரி மூலமாக இப்பதவியில் பணியமர்த்தப்படுகின்றனர். அந்த வகையில், பல்வேறு அமைச்சகங்களில் 45 இணை செயலாளர்கள், இயக்குநர்கள் பதவியை லேட்டரல் என்ட்ரி முறையில் நிரப்ப யுபிஎஸ்சி விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இதில் 10 பணியிடங்கள் இணை செயலாளர்கள், 35 பணியிடங்கள் இயக்குநர்கள்/துணை செயலாளர்கள் பணியிடங்களாகும். இதுவரை 63 நியமனங்கள் லேட்டரல் என்ட்ரி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

The post லேட்டரல் என்ட்ரி முறையில் 45 இணை செயலர், இயக்குநர் பதவிகளை நிரப்பும் யுபிஎஸ்சி: அறிவிப்பு வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: