மெட்ரோ ரயில் கோயம்பேடு பணிமனையில் அதிநவீன காற்றழுத்தவியல் ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது..!!

சென்னை: மெட்ரோ ரயில் கோயம்பேடு பணிமனையில் அதிநவீன காற்றழுத்தவியல் ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் கோயம்பேடு பணிமனையில், மெட்ரோ இரயில் பராமரிப்பு பிரிவில், மெட்ரோ இரயில் பராமரிப்பு செயல்திறனை மேம்படுத்தும் பொருட்டு, அதிநவீன காற்றழுத்தவியல் ஆய்வகம் (Pneumatic Laboratory) மற்றும் கருவி தொகுப்புகளின் கிடங்கு (Tool Crib) நேற்று (16.08.2024) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக்கால் திறந்து வைக்கப்பட்டது.

​இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), ஆலோசகர் ராமசுப்பு (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் (தொடர்வண்டி), கூடுதல் பொது மேலாளர் சி.பாலமுருகன் (தொடர்வண்டி), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

​கட்டம் 1 வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ இரயில்களில் காற்றழுத்தங்களை ஆய்வு செய்து, சரிபார்த்து, சோதனை செய்து, பழுதுபார்த்து சரிசெய்யும் வசதிகள் இந்த ஆய்வகத்தில் உள்ளன. 5S முறையைப் பயன்படுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட தனித்துவமான கருவி தொகுப்புகளின் கிடங்கு (dedicated tool crib), திறமையான பராமரிப்பு செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இந்த உள்கட்டமைப்பு மேம்பாடு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பராமரிப்பை மேம்படுத்தி, செலவுகளைக் குறைத்து, புதுமையை வளர்ப்பதை ஊக்குவிக்கிறது.

 

The post மெட்ரோ ரயில் கோயம்பேடு பணிமனையில் அதிநவீன காற்றழுத்தவியல் ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது..!! appeared first on Dinakaran.

Related Stories: