வேளாண் தொழில்நுட்பங்கள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

சேந்தமங்கலம், ஆக.17: எருமப்பட்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், பவித்திரம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ், வேளாண்மை சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு கிராமிய கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் பாபு முன்னிலை வகித்தார். வேளாண்மை துறையின் மானிய திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், பயிர் காப்பீடு, மண் பரிசோதனை, இயற்கை விவசாயம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து நடனம், பாடல், நகைச்சுவையின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் சத்யா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் நந்தகுமார், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தேகபிரியா, காவியா ஆகியோர் செய்திருந்தனர்.

The post வேளாண் தொழில்நுட்பங்கள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: