தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
திண்டுக்கல் மாவட்ட டிஎஸ்பியாக இருந்த உதயகுமார் மதுரை மாநகர கட்டுப்பாட்டு மைய துணை கமிஷனராகவும், சிவகங்கை மாவட்டம் மயிலாடுதுறை டிஎஸ்பியாக இருந்த கண்ணன் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த ரமேஷ் மதுரை நகர தெற்கு உதவி கமிஷனராகவும், திண்டுக்கல் மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பியாக இருந்த செந்தில்குமார் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி டிஎஸ்பியாகவும், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டிஎஸ்பியாக இருந்த பால்ராஜ் திண்டுக்கல் மாவட்டம் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பியாகவும், சிவகங்கை டிஎஸ்பியாக இருந்த சிபி சாய் சவுந்தரியன் திண்டுக்கல் டிஎஸ்பியாகவும், மதுரை மாவட்டம் பேரையூர் டிஎஸ்பியாக இருந்த இலக்கியா திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் டிஎஸ்பியாகவும், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் டிஎஸ்பியாக இருந்த துர்கா தேவி மதுரை மாவட்டம் பேரையூர் டிஎஸ்பியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த சீனிவாசன் கோபிசெட்டிப்பாளையம் டிஎஸ்பியாகவும், திருப்பூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பியாக இருந்த முத்துகுமரன் ஈரோடு டவுன் டிஎஸ்பியாகவும், ஈரோடு டவுன் டிஎஸ்பியாக இருந்த ஜெய்சிங் கிருஷ்ணகிரி மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணையம் டிஎஸ்பியாகவும், கோபிசெட்டிப்பாளையம் டிஎஸ்பியாக இருந்த தனகவேல் ஈரோடு மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பியாகவும், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் டிஎஸ்பியாக இருந்த கலையரசன் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டிஎஸ்பியாகவும், நாமக்கல் மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த மனோகரன் தருமபுரி மாவட்டம் பாலகோடு டிஎஸ்பியாகவும், தருமபுரி மாவட்டம் பாலகோடு டிஎஸ்பியாக இருந்த சிந்து திருவள்ளூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி சிபிசிஐடி டிஎஸ்பியாக இருந்த சிவக்குமார் கோவை மாவட்டம் பேரூர் டிஎஸ்பியாகவும், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் டிஎஸ்பியாக இருந்த பார்த்திபன் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை டிஎஸ்பியாகவும், திருநெல்வேலி நகர குற்ற ஆவணக் காப்பக உதவி கமிஷனராக இருந்த சந்திரசேகரன் ஈரோடு மாவட்டம் பவானி டிஎஸ்பியாகவும், கோவை கட்டுப்பாட்டு அறை டிஎஸ்பியாக இருந்த சுரேஷ்குமார் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் டிஎஸ்பியாகவும், ஈரோடு மாவட்டம் குற்ற ஆவணக் காப்பகம் டிஎஸ்பியாக இருந்த ஆறுமுகம் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை டிஎஸ்பியாகவும், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை டிஎஸ்பியாக இருந்த சுகுமாரன் திருவாரூர் மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், புதுக்கோட்டை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பியாக இருந்த செந்தில் இளந்திரையன் மதுரை சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாகவும், ஈரோடு மாவட்டம் பவானி டிஎஸ்பியாக இருந்த அமிர்த வர்ஷினி விழுப்புரம் மாவட்டம் சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாகவும், நாமக்கல் மாவட்டம் குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த வின்சென்ட் திருச்சி மாவட்டம் சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாகவும், கோவை மாவட்டம் சிவில் சப்ளை டிஎஸ்பியாக இருந்த ஜனனி பிரியா காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை டிஎஸ்பியாக இருந்த மாரிமுத்து கோவை சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாகவும், தஞ்சை மாவட்டம் வல்லம் டிஎஸ்பியாக இருந்த நித்யா தஞ்சை சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாகவும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் டிஎஸ்பியாக இருந்த சரவணகுமார் சென்னை சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுரேஷ்குமார் நாமக்கல் மாவட்டம் குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், திருவாரூர் மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த பாஸ்கரன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி டிஎஸ்பியாகவும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் டிஎஸ்பியாக இருந்த சரவணக்குமார் சென்னை சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாகவும், அரியலூர் மாவட்டம் குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாக இருந்த தமிழ்மாறன் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் டிஎஸ்பியாகவும், திருத்துறைப்பூண்டி டிஎஸ்பியாக இருந்த சோமசுந்தரம் தஞ்சை நகர டிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு டிஜிபி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு முழுவதும் 33 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்: காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு appeared first on Dinakaran.