தற்போது வரை 5.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டதில், 3.5 லட்சம் மரங்கள் வளர்ந்துள்ளன. கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிமாநிலங்களிலும் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளார். இதுதவிர, மரம் நடுதல் குறித்து விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகிறார். இலவசமாக மரக்கன்றுகளை வழங்குதல், அழிந்து வரும் அரிய வகை மரங்களை மீட்டு எடுத்தல் போன்ற பணிகளையும் செய்து வருகிறார். ஒவ்வொரு திங்கட்கிழமையும் இதை செய்து வருகிறார்.
தனது விடுமுறை நாட்களிலும் மரக்கன்று நடவு பணிகளில் ஈடுபடுவார். இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும், தொடர்ந்து மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறார். இவரது பணிக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 2008ல் அப்போதைய துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி பசுமை போராளி விருதை வழங்கினார். தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் விருது, பெரியார் விருது, மத்திய நீர்வளத்துறை காலநிலை போர்வீரர் விருதுகளை பெற்றுள்ளார். 2015ல் சிபிஎஸ்இ 5ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இவரை பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருந்தது.
யோகநாதன் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு பசுமைப்புரட்சி செய்து வருவதை பாராட்டி 78வது சுதந்திர தினத்தையொட்டி இன்று (15ம் தேதி) டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் ‘அட் ஹோம் ரிசப்ஷன்’ நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட உள்ளார். இதற்காக அவர் கோவையில் இருந்து விமானம் மூலம் நேற்று டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார். இன்று நடக்கும் சுதந்திர தின நிகழ்வில் அவரை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பாராட்டி கவுரவிக்க உள்ளார். கடந்த 2008ல் அப்போதைய துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி பசுமை போராளி விருதை யோகநாதனுக்கு வழங்கினார். தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் விருது, பெரியார் விருது, மத்திய நீர்வளத்துறை காலநிலை போர்வீரர் விருதுகளை பெற்றுள்ளார். 2015ல் சிபிஎஸ்இ 5ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இவரை பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருந்தது.
The post டெல்லியில் இன்று சுதந்திர தின நிகழ்வில் கோவை அரசு பஸ் கண்டக்டரை கவுரவிக்கும் ஜனாதிபதி முர்மு: புற்றுநோய் பாதித்தபோதும் 5.5 லட்சம் மரக்கன்று நடவு செய்ததற்கு பாராட்டு appeared first on Dinakaran.
