அதேநேரம் வாரத்தின் புதன்கிழமை மட்டும் போலீஸ் கமிஷனர் அருண் பொதுமக்களிடம் நேரடியாக புகார்கள் பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறை தீர் முகாமில், போலீஸ் கமிஷனர் அருண் கலந்துகொண்டு முதியவர்கள் உள்பட 35 பேரிடம் நேரடியாக புகார் மனுக்கள் பெற்றார். பிறகு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரட்கர் உடனிருந்தார்.
The post குறைதீர் முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார் கமிஷனர் அருண் appeared first on Dinakaran.