இஒஎஸ்-08 செயற்கைக்கோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்: கவுண்ட்டவுன் இன்று ஆரம்பம்

சென்னை: இஒஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன இஒஎஸ்-08 எனும் செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் சிறியரக எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நாளை (16ம் தேதி) காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஒஎஸ்-08 செயற்கைக்கோளில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்பராரெட் பேலோடு (இஓஐஆர்), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிபிளக்டோமெட்ரி பேலோட் (ஜஎன்எஸ்எஸ்-ஆர்) மற்றும் எஸ்ஐசி யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வு கருவிகள் இணைக்கப்பட்டு உள்ளன.

இந்த கருவிகளின் பணிக்காலம் ஒரு ஆண்டாகும். இந்த செயற்கைக்கோள் பூமியை 24 மணி நேரமும் புகைப்படம் எடுத்து கண்காணிக்கும். பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ கண்டறிதல் போன்ற பயன்பாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு முன்பாக இறுதிகட்டப்பணியான கவுண்ட்டவுன் இன்று தொடங்க உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

The post இஒஎஸ்-08 செயற்கைக்கோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்: கவுண்ட்டவுன் இன்று ஆரம்பம் appeared first on Dinakaran.

Related Stories: