ஆலங்குடி அருகே தூர்வாரப்பட்ட புதுகுளத்தில் பொங்கலிட்டு வழிபாடு

புதுக்கோட்டை,ஆக.14: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுகுளம் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களால் தூர்வாரப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் பெய்த மழையால் அந்த குளத்தில் தண்ணீர் வரத்து வந்துள்ள நிலையில் குளத்தை தூர் வாரிய பணியாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி தூர்வாரப்பட்ட புதுகுளத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி ஊராட்சி சம்பூரான்பட்டி கிராமத்தில் புதுக்குளம் உள்ளது. இந்த குளத்தை தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியத்தில் அனுமதி பெற்று பணியாளர்கள் தூர்வாரி குளத்தை ஆளப்படுத்தினர். இந்நிலையில் குளம் தூர்வாரும் பணி நிறைவடைந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் சம்பந்தப்பட்ட புதுகுளத்திற்கு நீர் வரத்து வர தொடங்கியுள்ளது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட புதுகுளத்தை தூர்வாரிய 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் அப்பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சம்பந்தப்பட்ட புதுக் குளத்திலேயே பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு நடத்தினர். மேலும் இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளனமான பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post ஆலங்குடி அருகே தூர்வாரப்பட்ட புதுகுளத்தில் பொங்கலிட்டு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: