குன்னம்,ஆக.14: குன்னம் வட்டம் வயலப்பாடியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் 760 மனுக்கள் பெறப்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் அகரம்சீகூர், வசிஸ்டபுரம், வயலப்பாடி, கீழப்பெரம்பலூர், கொளப்பாடி ஆகிய கிராம ஊராட்சிகளை சேர்ந்தவர்களுக்காக மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் வயலப்பாடி கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. முகாமை தனித் துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் கார்த்திகேயன், உதவி திட்ட அலுவலர் சென்னகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முகாமில், எரிசக்தி துறை, தமிழ்நாடு மின்சார வாரிய துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவு மற்றும் உணவுப்பாதுகாப்புத்துறை, வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, உள்துறை (காவல்), மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரி மைத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, வேளாண் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, ஆதிதிரா விடர் நலத்துறை,பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நலத் துறை, மாவட்ட தொழிற் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகிய 15 அரசுத்துறைகளில் வழங் கப்படும் 45 சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இதில், பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 760 மனுக்கள் பெறப்பட்டன. இதில், தாசில்தார் கோவிந்தம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், பூங்கொடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி மற்றும் வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் செல்வராணி வரதராஜன்,ஊராட்சி மன்ற தலைவர்கள் உமா பரமசிவம், துணைத் தலைவர் செந்தில்குமார், முத்தமிழ்செல்வன்,சத்தியா காமராஜ், கனிமொழி பன்னீர்செல்வம்,அகரம்சீகூர் கவுன்சிலர் சுப்ரமணியன்,ஊராட்சி செயலாளர்கள் முருகதாஸ், சட்டநாதன், சங்கர், ராஜேந்திரன், சுமதி செல்வம் கிராம நிர்வாக அலுவலர்கள் சேஷாத்திரி, மனோகரன், கிருஷ்ணன், நந்தகோபால், ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post அமைச்சர் சா.சி.சிவங்கர் வழங்கினார் குன்னம் அருகே வயலப்பாடியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 760 மனுக்கள் பெறப்பட்டன appeared first on Dinakaran.