ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர் நியமிக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

 

தொண்டி, ஆக.14:தொண்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பற்றாக்குறை நீண்ட காலமாக உள்ளது. உடனடியாக கூடுதல் டாக்டர் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் தொண்டி வளர்ந்துவரும் நகர் பகுதியாகும். தொண்டியை மையமாக வைத்து 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வசிக்கும் இப்பகுதி மக்கள் அனைவரும் இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தையே நாடுகின்றனர். 5 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டியதில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். அவசர சிகிச்சைக்கு வருவோர் கடும் சிரமம் அடைகின்றனர்.

பெரும்பாலும் முதலுதவி சிகிச்சை மட்டுமே நடக்கிறது. கூடுதல் டாக்டர் நியமிக்க பல முறை முறையிட்டதன் பயனாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களின் நலன் கருதி உடனடியாக மருத்துவர்கள் நியமிக்க வேண்டும். இது குறித்து மனிதேநேய மக்கள் கட்சி பரக்கத் அலி கூறியது, மருத்துவர் பற்றாக்குறையால் அவசர கேஸ், விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இது சில நேரங்களில் பெரிய இழப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றார்.

The post ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர் நியமிக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: