ஆண்டிபட்டி அருகே அரசு பள்ளியில் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

ஆண்டிபட்டி, ஆக. 13: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டினை உருவாக்கிடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை பல்கலைக்கழக கூட்டரங்கில் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற உறுதி மொழியினை மாணவ, மாணவியர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் தலைப்பில், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, தலைமையில், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி மற்றும் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

The post ஆண்டிபட்டி அருகே அரசு பள்ளியில் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: