அரியானா காங்கிரஸ் எம்எல்ஏவின் ரூ.122 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி: அரியானா காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வார், முன்னாள் ஐஎன்எல்டி எம்எல்ஏ தில்பாக் சிங் உள்ளிட்டோரின் சுமார் ரூ.122 கோடி மதிப்புள்ள 100 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அரியானா மாநிலம் யமுனை நகரில் மணல், பாறாங்கல் உள்ளிட்டவற்றை சட்டவிரோதமாக எடுத்தது தொடர்பாக போலீசார் பல்வேறு வழக்குப்பதிவு செய்தனர். இதில் சட்டவிரோதப்பணப்பறிமாற்றம் நடந்ததாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் சோனிபட் காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வார், முன்னாள் ஐஎன்எல்டி எம்எல்ஏ தில்பாக் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சொந்தமான ரூ.122 கோடி மதிப்பு சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ள 145 அசையா சொத்துக்களில் 100 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள், சில வணிக வளாகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த சொத்துக்கள் குருகிராம், பரிதாபாத், சோனிபட், கர்னால், யமுனா நகர், சண்டிகர், பஞ்ச்குலா மற்றும் பஞ்சாப் மாநில பகுதியில் இடம் பெற்றுள்ளன.

The post அரியானா காங்கிரஸ் எம்எல்ஏவின் ரூ.122 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: