திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று 61,613 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 20,291 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ3.12 கோடி காணிக்கை செலுத்தினர்.சனிக்கிழமையான இன்று காலை நிலவரப்படி திருமலைக்கு வரும் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து காலை சுமார் 8மணியளவில் பக்தர்கள் எண்ணிக்ைக அதிகரித்ததால் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ3.12 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.