135 பேரை காவு வாங்கிய விபத்து; மோர்பி பால விபத்தில் ஜாமீனில் வந்த தொழிலதிபருக்கு பாராட்டு: குஜராத்தில் சர்ச்சை

மோர்பி: குஜராத்தின் மோர்பி பால விபத்தில் ஜாமீனில் வௌியே வந்த தொழிலதிபர் ஜெய்சுக் படேலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் ஓடும் மச்சு ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் கடந்த 2022, அக்டோபர் 30ம் தேதி அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 135 பேர் பலியாகினர். இந்த வழக்கில் பாலத்தின் புனரமைப்பு பணிகளை செய்து வந்த ஒரேவா நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜெய்சுக் படேல் 10வது குற்றவாளியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது ஜாமீன் மனுவை கடந்த மார்ச் 22ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் படேலை ஜாமீனில் விடுவித்ததுடன், அவர் மோர்பிக்குள் நுழைய தடை விதித்தது. சமீபத்தில் இந்த நிபந்தனையை தளர்த்தி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஜெய்சுக் படேல் மீண்டும் மோர்பி மாவட்டத்துக்கு சென்றார். அங்கு படிதார் சமுதாய மக்கள் நடத்திய நிகழ்ச்சியில் ஜெய்சுக் படேலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அஜந்தா குழுமத்தை நிறுவிய படேலின் மகன் என்ற அடிப்படையில் ஜெய்சுக் படேல் கவுரவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு மோர்பி பால விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

The post 135 பேரை காவு வாங்கிய விபத்து; மோர்பி பால விபத்தில் ஜாமீனில் வந்த தொழிலதிபருக்கு பாராட்டு: குஜராத்தில் சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: