முதலமைச்சர் உத்தரவின்படி, போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கோடு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் சேலம் மாவட்டத்தில் இன்றைய தினம் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். மேலும், சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி இன்றைய தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து, சேலம், சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி. இ.ஆ.ப. கொடியசைத்து துவக்கி வைந்தார்கள். இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆக்ரிதி சேத்தி. இ.ஆ.ப. இணை இயக்குநர் நல பணிகள் (பொ) ராதிகா துணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்) சவுண்டம்மாள், யோகநத், உதவி ஆணையர் (கலால்) சி.மாறன், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன், சேலம் வட்டாட்சியர் தாமோதரன். கல்லூரி முதல்வர் எம்.பாலசிங். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகன்நாதன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி..!! appeared first on Dinakaran.