வலங்கைமானில் ₹1.37 கோடியில் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் கட்டும் பணி மும்முரம்: பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என எதிர்பார்ப்பு

வலங்கைமான், ஆக. 12: வலங்கைமானில் ரூ.1.37 கோடியில் புதிய பத்திரபதிவு அலுவலகம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலங்கைமான் தாலுகாவில் 71 வருவாய் கிராமங்கள் உள்ளன.கிராமங்களில் உள்ள நஞ்சை புஞ்சை மற்றும் வீடு உள்ளிட்டவைகள் தொடர்பாக பத்திரப்பதிவு செய்யும் விதமாக சார்பதிவாளர் அலுவலகம் வலங்கைமான் நீடாமங்கலம் மற்றும் பாபநாசம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.இவற்றில் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் கடந்த 1947ம் ஆண்டு முதல் வடக்கு அக்கிரஹாரம் பகுதியில் கிழக்கேகீழ விடையல் வருவாய் கிராமத்தினையும் மேற்கே ஆவூர் வருவாய் கிராமத்தினையும் தெற்கே ஆலங்குடி வருவாய் கிராமத்தினையும் உள்ளடக்கியதாக வலங்கைமான் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

ஆதிச்சமங்களம் கோவி ந்தகுடி சந்திரசேகரபுரம் தொழுவூர் செம்மங்குடி மேல விடையல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். மிகப் பழமையான கட்டிடத்தில் சுமார்கடந்த 75 ஆண்டுகளாக மிகப் பழமையான கட்டிடத்தில் அடிப்படை வசதிகள் இன்றி பழுதடைந்த கட்டிடத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் பொதுமக்களின் தொடர் கோரிக்கையினை ஏற்று புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஏற்ற வகையில் பயன்பாட்டில் இருந்த பழுதடைந்த பழமையான கட்டிடம்கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் அலுவலர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்களின் தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்காலிகமாக மாற்று இடத்திற்கு முன்னதாக சார்பதிவாளர் அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டது.

தற்போது போதிய இடவசதி இன்றி வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பழுதடைந்தபழைய கட்டிடம் இடிக்கப்பட்ட பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் நன்னிலம் பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உபகோட்டத்தின் கீழ் ஒரு கோடியே முப்பத்தி ஏழு லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி பெறப்பட்ட நிலையில் கட்டுமான பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கியது. தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் கட்டுமான பணிகள் முடிவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

The post வலங்கைமானில் ₹1.37 கோடியில் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் கட்டும் பணி மும்முரம்: பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: