கட்டட அனுமதி புதுப்பிப்பு: தனிநீதிபதி உத்தரவு ரத்து

சென்னை: கட்டட அனுமதியை புதுப்பிக்கும்போது, உரிய கட்டணங்களை வசூலிக்க நகராட்சிக்கு அதிகாரம் உள்ளது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த ஜமால்ஸ் என்ற கட்டுமான நிறுவனம், திருவேற்காட்டில் 2 மாடி கட்டடம் கட்ட அனுமதி பெற்றது. ஜமால்ஸ் நிறுவனம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் உரிய கட்டணம் செலுத்தி 2013-ல் திட்ட அனுமதி பெற்றது. திருவேற்காடு நகராட்சி 2014-ல் 3 ஆண்டுகளுக்கு கட்டட அனுமதி வழங்கி, அதற்காக மேம்பாட்டு கட்டணமும் வசூலித்தது. 3 ஆண்டுகளில் கட்டடம் கட்டாததால் அனுமதியை புதுப்பிக்க ரூ.35 லட்சம் மேம்பாட்டு கட்டணம் செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸை எதிர்த்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கட்டணம் பெறாமல் அனுமதியை புதுப்பிக்க நகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. உத்தரவை எதிர்த்து நகராட்சி ஆணையர் வழக்கு; நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நகராட்சிகள் சட்டப்படி, அனுமதி காலாவதியானால் அதை புதுப்பிக்க புதிதாகத் தான் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை வசூலிக்க நகராட்சிக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் தீர்ப்பளித்தது.

The post கட்டட அனுமதி புதுப்பிப்பு: தனிநீதிபதி உத்தரவு ரத்து appeared first on Dinakaran.

Related Stories: