கோத்தகிரி அரசு மருத்துவமனை, பூங்காவினை அமைச்சர் ஆய்வு

கோத்தகிரி : கோத்தகிரி கன்னேரிமுக்கு ஜான் சல்லிவன் பூங்கா மற்றும் கோத்தகிரி அரசு மருத்துவமனை ஆகியவற்றை சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.88 லட்சம் மதிப்பீட்டில் ஜான் சல்லிவன் நினைவாக பூங்கா அமைக்க திட்டமிட்டு ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சி துறைகளின் சார்பில் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் சுற்றுச்சுவர் அமைத்தல்,உணவுக்கூடம் அமைத்தல், சுகாதார வசதிகள் ஏற்படுத்துதல் நீரூற்று அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் 9.6 ஏக்கர் நிலப்பரப்பில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைத்தல்,மலர் செடிகள் நடவு செய்தல்,புல் தரைகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க் கொண்டார்.

தொடர்ந்து கோத்தகிரி அரசு மருத்துவமனையில் பெண்கள் புறநோயாளிகள் பிரிவு,வெளி நோயாளிகள் பிரிவு,ஸ்கேன் எடுக்கும் இடம்,ரத்த பரிசோதனை மையம்,ரத்த சேமிப்பு அறை,தொற்றுநோய் பிரிவு,தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்க் கொண்டு,மருந்து,மாத்திரைகளின் இருப்பு மற்றும் தினந்தோறும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்வில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா, கோத்தகிரி வட்டாட்சியர் கோமதி, கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் இப்ராஹிம், கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி,துணைத் தலைவர் உமாநாத், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post கோத்தகிரி அரசு மருத்துவமனை, பூங்காவினை அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: