ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்: கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை: ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு நீதி கிடைக்க போதுமான முயற்சிகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி): ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் நடந்திருப்பதும், தொடர்ந்து, ஒன்றிய அரசாங்கத்தின் மவுனமும் தகுதி நீக்கம் சதியாக இருக்குமோ என்கிற சந்தேகத்தை வலுவாக எழுப்பியுள்ளது. இதற்கு ஒன்றிய பாஜ அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி): இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இறுதிப்போட்டியின் போது எடை எவ்வாறு அதிகரித்தது, அதற்கு பின் என்ன சதி அரங்கேறியது என்பது விடைகாணப்பட வேண்டிய கேள்விகளாகும். 100 கிராம் எடை அதிகம் என்று கூறி அவரைத் தகுதிநீக்கம் செய்திருப்பதும், ஏற்கனவே வெள்ளிப் பதக்கத்துக்கு உரிய வெற்றியைப் பெற்றிருந்தும் அதை நிராகரித்திருப்பதும், போட்டியிடாமலேயே அமெரிக்காவைச் சேர்ந்தவர் தங்கப்பதக்கம் பெற்றிருப்பதும் பெரும் ஐயத்தை ஏற்படுத்துகின்றன.

The post ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்: கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: