கோவை, ஆக. 8: கோவை சின்னியம்பாளையம் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் சைபர் குற்றங்கள் இல்லாத மற்றும் போதைப்பொருள் இல்லாத கோவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் காவல் துறையின் ‘போலீஸ் அக்கா’ என்ற திட்டம் குறித்தும், போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதை நோக்கமாக கொண்ட ‘போலீஸ் பிரதர்” திட்டம் குறித்தும் மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.
இதில், சக்தி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் செ.தங்கவேலு, பேராசியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். சக்தி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியிலும் ‘போலீஸ் அக்கா’ மற்றும் ‘போலீஸ் பிரதர்’ திட்டத்தில் 3 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
The post திமுக சார்பில் மருத்துவ உதவி சக்தி கல்லூரியில் ‘போதைப்பொருள் இல்லா கோவை’ விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.