ராஜஸ்தானில் அருவியில் ரீல்ஸ் எடுத்த போது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்: நண்பர்கள் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த சோகம்

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் அருவியில் நின்று ரீல்ஸ் எடுத்த இளைஞர் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 150 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலம் புல்வாரா பகுதியில் உள்ள அருவிக்கு இளைஞர்கள் சிலர் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அருவியில் நின்று அவர்கள் ரீல்ஸ் எடுத்த போது திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில் அவர்களில் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டார்.

அவருடன் இருந்த நண்பர்கள் அவரை பிடித்து இழுக்க முயன்றனர். ஆக்ரோஷமாக சென்ற நீரின் வேகத்தில் அந்த இளைஞர் அடித்து செல்லப்பட்டு 150அடி உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த மாநிலத்தின் ஜெய்சல்மர், பாலி, ஜோத்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளம் தேங்கியது. பாலி பகுதியில் ஒரே நாளில் 25 செ.மீ வரை கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் அங்கு பல சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அங்குள்ள சாத்திரி பகுதியில் குழந்தைகளுடன் சென்ற பள்ளி பேருந்து ஆற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டது. அந்த வேனை அங்கிருந்தவர்கள் மற்றொரு வாகனத்தில் கயிறுகட்டி கரைக்கு இழுத்தனர். நல்வாய்ப்பாக வேனிலிருந்து குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதே போல கோரா சாலையில் ஜீப் ஒன்று 4 முதல் 5 அடி அழ பள்ளத்தில் சிக்கி கொண்டது. அதனை புல்டவுசர் கொண்டு மீட்டனர்.

The post ராஜஸ்தானில் அருவியில் ரீல்ஸ் எடுத்த போது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்: நண்பர்கள் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த சோகம் appeared first on Dinakaran.

Related Stories: