மின்சாரம் தாக்கி இறந்த கேங்மேன் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு

*சிஐடியூ கண்டன ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம் : மின்சாரம் தாக்கி இறந்த கேங்மேன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, பணப்பயன் உள்ளிட்டவைகள் வழங்கிட கோரி ஜெயங்கொண்டம் மின் வாரியம் அலுவலகம் முன்பு சிஐடியூ சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தைச்சேர்ந்த கேங்மேன் செந்தில்குமார் பழுது நீக்கிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில் செந்தில்குமார், குடும்பத்துக்கு நஷ்டஈடு கேட்டு ஜெயங்கொண்டம் மின்சார வாரிய அலுவலகத்திற்கு முன்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய இணைப்பு (சிஐடியு) சார்பில் உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கேங்மேன்கள் சிஐடியு சங்கத்தினருடன் இணைந்து சிஐடியு திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிஐடியு சங்க மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். கேங்மேன்கள் செந்தில்குமாரின் குடும்பத்திற்கு நஷ்டஈடாக ரூ25 லட்சமும், குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலையும் , பணப்பயன் உள்ளிட்டவைகளை 3 மாத காலத்திற்குள் வழங்கவேண்டும், கேங்மேனுக்கு என்ன பணி பணிக்கப்படுகிறதோ அந்தப் பணியினை மட்டுமே அவர்களுக்கு பணிக்க வேண்டும், கேங்மேன்கள் மேற்பார்வையாளர்கள் இல்லாமல் தனியாக பணிக்கு அனுப்பக்கூடாது, விபத்துக்கு காரணம் விதிமுறைகளை கடைபிடிக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.இதில் சிஐடியு செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் மற்றும் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மின்சாரம் தாக்கி இறந்த கேங்மேன் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு appeared first on Dinakaran.

Related Stories: