வினேஷ் போகத் தகுதிநீக்கம் சதி: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு


டெல்லி: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து உரிய விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. வினேஷ் போகத் தகுதிநீக்கத்தில் சதி இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் சதி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. வினேஷ் வெற்றியை யாரால் ஜீரணிக்க முடியாதோ அவர்கள்தான் சதி செய்திருப்பர் என்றும் காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. தகுதிநீக்கத்தின் பின்னணி பற்றி முழுமையாக விசாரிக்க அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

The post வினேஷ் போகத் தகுதிநீக்கம் சதி: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: