காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பரில் தேர்தல்: ஒன்றிய அமைச்சர் தகவல்

ஆர்எஸ் புரா : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார். ஜம்மு மற்றும் காஷ்மீர் பாஜ தேர்தல் பொறுப்பாளரும், ஒன்றிய அமைச்சருமான கிஷன் ரெட்டி நேற்று ஜம்முவின் புறநகரில் உள்ள பானா சிங் ஸ்டேடியத்தில் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் ஐந்தாவது ஆண்டு விழாவில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: செப்டம்பரில் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும். ஜம்முவில் கொண்டுவந்துள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டு மக்கள் பாஜவை முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வாக்களிப்பார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தின் மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு மரணத்தையும் அழிவையும் கொண்டு வந்த 370 வது பிரிவை மீண்டும் அமல்படுத்துவது பற்றி எதிர்க்கட்சிகள் பேசுகிறார்கள். எனவே காஷ்மீரில் எந்த அரசு வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு புத்துயிர் அளிக்க வாய்ப்பு உள்ளது . இவ்வாறு அவர் பேசினார்.

The post காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பரில் தேர்தல்: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: