இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி இழப்பு : அடுத்த சில மாதங்கள் கவனத்துடன் முதலீடு செய்ய நிபுணர்கள் அறிவுரை

மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியப் பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வாரத்தின் முதல் நாளான இன்று பெரும் சரிவுடன் துவங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தொடர்ந்து 2200 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. சென்செக்ஸ் 2352 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 78629 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 721 புள்ளிகள் சரிந்து 23,989 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. உலக அளவில் பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையிலும் வவீழ்ச்சி காணப்படுகிறது.

சர்வதேச பங்குச்சந்தையில் வீழ்ச்சி காரணமாக இருந்தாலும் கடந்த வாரம் தாக்கல் செய்த பட்ஜெட் காரணமாகவும் பங்குச்சந்தை வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க மந்தநிலை அச்சம் மற்றும் மத்திய கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள பதட்டங்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தையை பாதித்துள்ளன. அது மட்டுமல்லாமல் ஜப்பான் மத்திய வங்கி வட்டிவிகிதத்தை உயர்த்தி உள்ளதால் பங்குச்சந்தை 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இந்த சரிவுகள் மூலம், வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் இந்திய முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.எனவே அடுத்த சில மாதங்கள் பங்குச்சந்தை மிகவும் சவாலானதாகவும் இருக்கும் என்று கணித்துள்ள நிபுணர்கள், முதலீட்டாளர்கள் கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர்.

The post இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி இழப்பு : அடுத்த சில மாதங்கள் கவனத்துடன் முதலீடு செய்ய நிபுணர்கள் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: