மேலும் முதல்வர் எழுதிய மடலில்; “நம் நெஞ்சத்தில் நிறைந்து வாழும் உயிர்நிகர்த் தலைவர் கலைஞரின் நினைவினைப் போற்றும் வகையில், ஆகஸ்ட் 7 அன்று சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலை அருகிலிருந்து, அவர் நிரந்தர ஓய்வெடுக்கும் கடற்கரை நினைவிடம் வரை கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது
கடல் அலைகளின் தாலாட்டில் நம் நினைவலைகளாக நெஞ்சில் நிறைந்துள்ள உயிர்நிகர்த் தலைவர் கலைஞரின் நினைவு நாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம். நம் உயிர் நிகர்த் தலைவருக்கு நம் நன்றிக் காணிக்கையைச் செலுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.
The post உயிர் நிகர்த் தலைவருக்கு நன்றிக் காணிக்கையைச் செலுத்துவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல் appeared first on Dinakaran.