இச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தி நோயை வருமுன் காக்க உதவுகின்றன.கூழையும்கூட அவரவர் வீட்டில் வைத்துக் கொண்டு அவரவர் மட்டுமே குடிக்காமல் அனைவருக்கும் கொடுத்து அனைவரும் நோயின்றி வாழ வழி செய்தனர் நம் முன்னோர்.அக்காலத்தில் ஆடிமாதத்தில்தான் அதிகமாகப் பஞ்சம் நிலவும். அப்பஞ்சத்தால் வரகுகூட வாங்க இயலாத மக்கள் இருந்தனர். செல்வச்செழிப்பு மிக்கவர்கள், அவர்களை தம் இல்லத்திற்கு அழைத்து கூழ் ஊற்றுவது அவர்களின் இல்லாமையை வெளிக்காட்டுவது போல் இருக்கும் என்று கருதி, ஆலயத்தில் அம்பாளின் பெயரில் அனைவரும் நோயின்றி வாழ வேண்டும் என்று கருதி கூழ் ஊற்றினர்.மேலும், தட்பவெப்பம் சரியாக இல்லாத நாட்களிலும் எளிதில் செரிக்கக் கூடிய உணவு இந்தக் கூழ். ஆடி மாதம் மழைக்காலம் தட்பவெப்பம் குறைபாடாக இருப்பதால் உணவு செரிமானம் ஆகாமல் உடலுக்கு ஊறு விளையும் என்பதாலும் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவது வழக்கமாக வந்தது.மேலும், இக்கூழில் இடப்படும் வேப்பிலையும், எலுமிச்சைப் பழமும் வெங்காயமும் இயற்கையான கிருமிநாசினிகள். இதனால் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கப்படுகின்றன. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற வகையிலும் அனைவரும் அச்செல்வத்தைப் பெற ஆடிக்கூழ் ஊற்றப்பட்டது. இப்படி கூழில் கூட அறிவியலைக் கண்டு ஆன்மிகம் வளர்த்த நம் முன்னோரை எப்படிப் போற்றுவது!
முனைவர் சிவ. சதீஸ்குமார்
The post ஆடிக்கூழும் அறிவியலும் appeared first on Dinakaran.
